Friday, May 7, 2010

Vikatan interview


ஜீன்ஸ் இளைஞர்கள் பரபரக்கும் 'ஷி' ஃபிலிம்ஸ் ஆபீஸ். மாடிப் படிகள் ஏறி, கதவில் கை வைத்தால், அமைதியாகக் கதவைத் திறந்தது ஷங்கர். 2011-ல் யாருடைய ஆட்சி என்பதைப்போல தமிழகத்தின் முக்கியமான எதிர்பார்ப்புக் கேள்வி, 'எப்படி இருக்கும் எந்திரன்?'
"நல்லா இருக்கீங்களா" - இரண்டு பேருமே ஒரே நேரத்தில் கேட்க, இன்னும் சிரிப்பு.
"ரொம்ப நாளாச்சுல்ல..." என்ற ஷங்கரிடம்,
"எடுத்தவரை 'எந்திரன்' எப்படி?" என டாப் கியரில் ஆரம்பித்தேன்...
"இப்பவும் கதையைச் சொல்ல முடியாது. ஆனால், எந்திரனை அழகாச் செதுக்கிக்கிட்டு இருக்கோம். 'முதல்வன்' கதை ரஜினிக்காக உருவாக்கப்பட்டது. அங்கு விட்டதை எந்திரனில் பிடிக்கிறேன். முதல் வனிலாவது ரஜினியின் இடத்தை அர்ஜுன் நிரப்பினார். ஆனால், எந்திரனைப் பொறுத்தவரை ரஜினியின் இடத்தை ரஜினி மட்டும்தான் நிரப்ப முடியும். ஒரு நிமிஷம் வந்துட்டுப்போற ஷாட்டாக இருந்தாலும், அவர் கவனம் பிசகுவது இல்லை. தரத்திலும், வசூலிலும் 'எந்திரன்' சிவாஜியை முந்தும் என்பது மட்டும் நிச்சயம்!"
"இவ்வளவு தாமதம், எந்திரனுக்கு அவசியம்தானா?"
"நிச்சயமாக. அவதாரை உருவாக்க ஜேம்ஸ் கேமரூனுக்கு 12 ஆண்டு கள் ஆச்சு. யாராவது கேமரூனைப் பார்த்து இப்படிக் கேட்பாங்களா? ஆனால், ஷங்கரிடம் மட்டும்தான் கேட்பாங்க. 'அவதார்' மாதிரியான ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன்தான் 'எந்திரன்'. நிச்சயமாக நீங்கள் படம் பார்க்கும்போது எங்கள் உழைப்பு தெரியும்!"
"இன்னும் ரஜினி ஹீரோவாகவே டூயட் பாடுறாரே, உங்களுடைய பர்சனல் கருத்து?"
"ரஜினி என்பவர் ஒரு சினிமாகுடும் பத்தில் வாரிசாகப் பிறந்து முதல் படத்திலேயே ஓப்பனிங் பாட்டுக்கு ஆடி, அடுத்த படத்திலேயே ரசிகர் மன்றம் தொடங்கி, மூணாவது படத் தில் 'சூப்பர் ஸ்டார்' பட்டம் வாங்கி, நாலாவது படத்தில் கமலைத் திட்டி பஞ்ச் டயலாக் பேசியவர் இல்லை. வில்லனாக அறிமுகம் ஆகி, சின்னச் சின்ன வேடமெல்லாம் செய்து, கடைசியில் அவர் மட்டும் படத்தில் இருந்தால்போதும், வேறு யாருமே தேவைஇல்லை என்கிற நிலையை அடைந்தவர். அப்படித்தான் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கிறாரே தவிர, அதிர்ஷ்டத்தால் இல்லை. ரஜினி மாதிரியான ஒரு வில்லனும் இல்லை, அவர் மாதிரியான ஹீரோவும் இல்லை. காமெடி, வில்லன், ஹீரோ, ஏன் கௌரவத்தோற்றம் செய்தால்கூட ஒரு தனித்துவம் இருக்கும். ரஜினி என்றாலே தனித்துவம்தானே! ஆனால், எனக்கு வில்லன் ரஜினியை அதிகம் பிடிக்கும். அந்த ரஜினி தமிழ் சினிமா வுக்குத் திரும்பவும் வேணும். அப்படி ஒரு டெரர் வில்லனை நீங்க எந்திர னில் பார்க்கலாம். என்னைக் கேட் டால் அப்பப்ப ரஜினி சார் வில்லன் கேரக்டர், குணச்சித்திரம்னு வெரைட் டியாச் செய்யணும். அவரது ரசிகர்கள் அதற்கு வழிவிடணும். ரஜினி என்கிற ஓர் அற்புதமான நடிகரின் பல்வேறு டைமன்ஷன்களைப் பார்க்க இன்னும் அதிக நாள் ஆகாது!"
"உங்க படத்துல ரஜினியோட அரசியல் 'பஞ்ச்' டயலாக் எல்லாம் களைகட்டுதுன்னு பேசிக்கிறாங்களே?"
"எனக்கென்னவோ ரஜினி அரசி யலுக்கு வருவார்னுதான் தோணுது. 'எந்திரனில்' அரசியல்ரீதியான பஞ்ச் டயலாக்ஸ் இருக்குன்னு சொன்னப்போ, ஒரு புன்னகையைத் தவிர, அவரிடம் இருந்து எந்த மறுப்பும் இல்லை. 'ஒரே ரெக்வெஸ்ட், தனிப்பட்ட தாக்குதல் வேணாம்'னு சொன்னார். ரஜினிக்குப் பின்னால இருக்கிற ரசிகர்கள் சக்தி நாம நினைச்சுப் பார்க்கவே முடியாதது. அப்படிப்பட்ட ஒரு மகத்தான மக்கள் சக்தியை ரஜினி வெறுமனே செயல்படுத்தாமல் வைத்திருப்பது சரியில்லைன்னுதான் நினைக்கிறேன்!"
"அஜீத், விஜய், சூர்யானு அடுத்த காம்பினேஷனில் வரவில்லையே ஏன்?"
"அஜீத் எனக்குப் பிடிக்கும். நிஜமாகச் சொன்னால் மனதில் பட்டதைப் பேசுவது ரொம்பப் பிடிக்கும். அஜீத் - விஜய்யை இனிமேல் இணைச்சுப் படம் பண்றது... அது பெரிய வியாபாரம். அஜீத், விஜய், சூர்யா சேர்ந்தால் இன்னும் பெரிய வியாபாரம். எய்ட் பேக்ஸ் அஜீத், தாடிவெச்ச விஜய்னு நீங்க எதிர்பார்க்கவே முடியாத மாற்றங்கள் இருக்கணும். நேத்துகூட சூர்யாவைப் பார்த்தேன். 'பக்கத்து வீடா இருந்தாலும் படம் பண்ணாமல் இருக்கோம் சார். நறுக்குனு நாலு ஸீன்னாலும் ஓ.கே. அப்பாவைச் சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு சார்'னு சொன்னார். நிச்சயமா உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்றேன்!"
"இத்தனை நாட்கள் அனுபவம் கற்றுத்தந்த பாடம் என்ன?"
"இங்கே நண்பர்கள் யாரு, எதிரிகள் யாருன்னு கண்டுபிடிக்கவே முடியாது. விரோதம் சொல்லாத கண்ணோடு சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. எனக்கு யார் மேலேயும் புகார் கிடை யாது. இன்னமும் வெற்றியின் ரகசியம் என்னாங்கிற கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்ல முடியலை.
வாழ்க்கை தொடர்ந்து ஆச்சர் யங்களைத் தந்துட்டே இருக்கு. இந்த வாழ்க்கையைக் கைதட்டி ரசிச்சு வாழ்த்திட்டுப் போறது தான் என் எண்ணம்!"

No comments:

Post a Comment